2024ம் ஆண்டின் மத்திய அரசு வெளியிட்ட சிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியலில் தொடர்ந்து 6-வது முறையாக சென்னை ஐஐடி முதலிடம் பிடித்துள்ளது. மேலும், சென்னை ஐஐடி ஒட்டுமொத்த பிரிவில் சிறந்த பல்கலைக்கழகம் என்ற பெருமையை பெற்றதோடு பொறியியல் பல்கலைக்கழகங்களில் முதலிடம் பிடித்துள்ளது. இந்த தரவரிசைப் பட்டியலில் பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவனம் 2வது இடமும், மும்பை ஐஐடி 3வது இடமும், டெல்லி ஐஐடி 4வது இடமும், கான்பூர் ஐஐடி 5வது இடமும் பிடித்துள்ளன.