கர்நாடகா: பெங்களூருவில் அமைந்துள்ள ஸ்ரீ பனசங்கரி அம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. தமிழ்நாட்டில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் இங்கு சென்று அம்பாளை தரிசனம் செய்வர். இந்த கோயிலின் தனித்துவமான சிறப்புகளில் ஒன்று, ராகு காலத்தின் போது நடைபெறும் இறை வழிபாடு. பொதுவாக ராகு காலம் அசுபமாக கருதப்படுகிறது. ஆனால் அந்த சமயத்தில் இங்கு அம்மனை வழிபட்டால் வாழ்வின் அனைத்து கஷ்டங்களும் நீங்கும் என்பது ஐதீகம்.