அறம் படத்தின் இயக்குநர் கோபி நயினார் வெளியிட்ட பதிவில், “தமிழ்நாட்டில் ஒரு தலித், ஜனநாயக சிந்தனையோடு அரசியல் கேள்விகளை எழுப்புவது பெரியாரிய சிந்தனையாளர்களுக்கும் திராவிட சித்தாந்தவாதிகளுக்கும் பெரும் கோபத்தை ஏற்படுத்துகிறது. ‘அறம்’ கதைக்கு விருது வழங்கிய திராவிடர் கழகம், நிஜ வாழ்வில் அதை நான் நடைமுறைப்படுத்தும் போது என்னை எதிரியாக சித்தரிக்கிறது. இது போன்ற காரணங்களுக்காக அறம் படத்திற்காக திராவிடர் கழகம் எனக்கு வழங்கிய பெரியார் விருதை திருப்பியளிக்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.