விஜயகாந்த் விட்டதை தொடர்ந்து பண்ணுவேன்

72177பார்த்தது
விஜயகாந்த் விட்டதை தொடர்ந்து பண்ணுவேன்
கடந்த டிசம்பர் 28ஆம் தேதி நடிகர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது உடல் அரசு மரியாதியுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில் விஜயகாந்த்தின் நினைவிடத்தில் திரைப் பிரபலங்கள் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் இன்று அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வந்த நடிகர் அருண் விஜய் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், விஜயகாந்த் சார் எனக்கு ஒரு பெரிய இன்ஸ்பிரேஷன். இனி வரும் காலங்களில், அவர் செய்த நல்ல விஷயங்களை என்னுடைய படப்பிடிப்பு தளத்தில் பின்பற்ற வேண்டும் என நினைக்கிறேன். அது எங்களுக்காக விட்டுட்டு போன விஷயம். அதை தொடர்ந்து பண்ண வேண்டும். கண்டிப்பா அதை பண்ணுவேன் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி