2024ஆம் ஆண்டு பிறந்துள்ள நிலையில் இந்த ஆண்டு சினிமா நடிகைகள் சிலர் திருமணம் செய்துகொள்ள உள்ளனர். குறிப்பாக நடிகை தமன்னாவின் திருமணம் இந்த ஆண்டு நடைபெறும் என தெரிகிறது. இவர் நடிகர்
விஜய் வர்மாவை காதலித்து வருகிறார். இருவரும் இந்த ஆண்டு திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டுள்ளனர். அதேபோல், நடிகைகள் ரகுல் ப்ரீத் சிங், அதிதி ராவ் ஹைதாரி ஆகியோரும் இந்த ஆண்டு திருமணம் செய்யவுள்ளனர். ஸ்ருதிஹாசன், '
வாத்தி' பட நடிகை சம்யுக்தா மேனன் ஆகியோரின் திருமணங்களும் நடைபெறலாம் என தகவல் வெளியாகியுள்ளது.