செங்கல்பட்டு அருகே சிங்கப்பெருமாள்கோவில், ஜிஎஸ்டி தேசிய நெடுஞ்சாலையில் அதிகாலை கார் உதிரி பாகங்கள் ஏற்றி வந்த லாரியும், சிமெண்ட் கலவை ஏற்றி வந்த லாரியும், டாரஸ் லாரியும் அடுத்தடுத்து மோதிய சம்பவத்தில் டீசல் டேங்குகள் வெடித்து லாரிகள் தீ பற்றி எறிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் சிமெண்ட் கலவை ஏற்றி வந்த லாரி ஓட்டுநர் சந்திரசேகர் (37) என்பவர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். 3 லாரிகளில் படுகாயம் அடைந்த சிவராஜ், முத்துப்பாண்டி, கோட்டைராஜ், ஏழுமலை ஆகிய 4 பேரை போலீசார் மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.