பிரதமர் மோடியுடன் அமைச்சர் உதயநிதி சந்திப்பு

82பார்த்தது
பிரதமர் மோடியுடன் அமைச்சர் உதயநிதி சந்திப்பு
டெல்லி சென்றுள்ள தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்திய பிரதமர் மோடியை சந்தித்துள்ளார். ஜனவரி 10 முதல் ஜனவரி 31 வரை தமிழகத்தில் நடைபெறும் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளுக்கான அழைப்பிதழை வழங்கினார். பிரதமர் இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் விளையாட்டு போட்டிக்கான அழைப்பிதழை வழங்கியுள்ளார். கிரிக்கெட் மற்றும் ஹாக்கியை தவிர்த்து மற்ற விளையாட்டு போட்டிகளில் திறமை வாய்ந்தவர்களை கண்டறிந்து ஒலிம்பிக் போட்டிகளுக்கு தயார் செய்யும் வகையில் இந்த கேலோ விளையாட்டு போட்டியானது நடைபெற உள்ளது.

தொடர்புடைய செய்தி