அன்றைக்கு இரவும் தூங்கவில்லை, இன்று இரவும் தூங்கமாட்டேன்: ரஷித் கான்

60பார்த்தது
அன்றைக்கு இரவும் தூங்கவில்லை, இன்று இரவும் தூங்கமாட்டேன்: ரஷித் கான்
டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலியா அணியை ஆஃப்கானிஸ்தான் அணி வென்றது. இந்த வெற்றிக்கு பின் ஆஃப்கானிஸ்தான் அணி கேப்டன் ரஷித்கான், "இன்று என்னால் நன்றாக தூங்கமுடியும் என நினைக்கிறேன். கடந்த ஆண்டு நடந்த ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தோல்வியால் மும்பையில் நான் தூங்கவில்லை. மேக்ஸ்வெல் தனி ஆளாக அப்படிப்பட்ட உணர்வை எனக்கு தந்துவிட்டார். ஆனால், இன்று நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம். இப்பொழுது என்னால் மகிழ்ச்சியால் தூங்கமுடியாது என நினைக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி