கைம்பெண்களுக்கு மாதம் ரூ.5,000 வழங்க கோரிக்கை.!

75பார்த்தது
கைம்பெண்களுக்கு மாதம் ரூ.5,000 வழங்க கோரிக்கை.!
உலக கைம்பெண்கள் தினத்தை முன்னிட்டு நாகை அவுரி திடலில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கணவரை இழந்த பெண்கள் கையில் பதாகைகள் ஏந்தி ஊர்வலமாக சென்றனர். பின்னர் தனியார் மண்டபம் ஒன்றில் நடந்த மாநாட்டில் பேசிய அவர்கள், பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். குடியால் குடும்பத் தலைவரை இழக்கும் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம் மற்றும் பெண்களுக்கு மாதம் தோறும் ரூ.5,000 உதவித் தொகை வழங்க வேண்டும், விதவைப் பெண்கள் உரிமைகளை பாதுகாக்க வன்கொடுமை தடுப்புச் சட்டம் இயற்ற வேண்டும் போன்ற 10க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தொடர்புடைய செய்தி