விஷச்சாராய மரணமா? - உடல் தோண்டி எடுப்பு

57பார்த்தது
விஷச்சாராய மரணமா? - உடல் தோண்டி எடுப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டம் மாதவச்சேரி கிராமத்தில் கடந்த 18-ம் தேதி உயிரிழந்த ஜெயமுருகனின் உடலை மீண்டும் தோண்டி பிரேத பரிசோதனை நடைபெற்று வருகிறது. ஜெயமுருகன் சாராயம் குடித்து உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், உறவினர்கள் பிரேத பரிசோதனைக்கு பயந்து உடலை புதைத்துள்ளனர். திடீரென விஷச் சாராயம் குடித்து உயிரிழந்ததாக நிவாரணம் கோரி அவரது உறவினர்கள் ஆட்சியரிடம் மனு அளித்த நிலையில், அவரது உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை நடைபெற்று வருகிறது.