சாலைகளில் திரியும் மாடுகள் - நெல்லை மாநகராட்சி அதிரடி

54பார்த்தது
சாலைகளில் திரியும் மாடுகள் - நெல்லை மாநகராட்சி அதிரடி
திருநெல்வேலியில் நேற்று சாலையில் சென்ற நீதிமன்ற ஊழியர் வேலாயுதராஜ் என்பவரை மாடு முட்டியதால் பேருந்து அடியில் விழுந்து உயிரிழந்தார். இந்த நிலையில், தற்போது நெல்லை மாநகராட்சி ஆணையர் மாடு உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, "மாடு வளர்ப்போர் பொது மக்களுக்கு இடையூறு இல்லாத வகையில், மாடுகளை கொட்டகையில் வைத்து பராமரித்துக் கொள்ள வேண்டும். சாலைகளில் மாடுகள் சுற்றி திரிந்தால் மாநகராட்சி பணியாளர்களால் மாடுகள் பிடிக்கப்படும், உரிமையாளர்களிடம் அபராதம் வசூலிக்கப்படும்" என எச்சரித்துள்ளது.