ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது. திலீப் - மீனாட்சி (26) காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் அவர்களுக்கு 3 வயதில் ஒரு குழந்தை உள்ளது. மீனாட்சி தற்போது 5 மாத கர்ப்பிணியாக உள்ளார். சமீபத்தில், திலீப் வேறொரு பெண்ணுடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்ததால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் மனைவியை வெறிச்சோடிய பகுதிக்கு அழைத்துச் சென்று கொலை செய்துள்ளார்.