வாஷிங்டன்: நிமோனியா நோயால் பாதிக்கப்பட்ட தைவான் நடிகை பார்பி ஹ்சு சிகிச்சை பலனின்றி இறந்தார். கடந்த 2001ம் ஆண்டு ரிலீசாகி வெற்றி பெற்ற ‘மீட்டியோர் கார்டன்’ என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்த தைவானிய நடிகை பார்பி ஹ்சு (48), நிமோனியா பாதிக்கப்பட்ட நிலையில் அவர் இறந்துவிட்டதாக அவரது சகோதரி டீ ஹ்சு தெரிவித்தார். பார்பி ஹ்சு சமீபத்தில் ஜப்பானுக்கு குடும்பத்தினருடன் சென்றிருந்தபோது இந்த பாதிப்பு ஏற்பட்டதாக அவரது சகோதரி கூறியுள்ளார்.