ராகுல் காந்தியை தாக்கி பேசிய மோடி

81பார்த்தது
ராகுல் காந்தியை தாக்கி பேசிய மோடி
ஏழை மக்களுடன் போட்டோ எடுப்பது சிலருக்கு பொழுதுபோக்கு என எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை பிரதமர் மோடி மறைமுகமாக தாக்கி பேசியுள்ளார். குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மான விவாதத்தில் உரையாற்றிய மோடி, "மற்றவர்களை போல சொகுசு மாளிகையில் தாம் வாழவில்லை. மாளிகைகளில் வசிக்காமல், ஏழைகளுக்கு வீடுகள் கட்டிக் கொடுத்திருக்கிறேன். ஏழைகளின் இல்லங்களுக்கு சென்று போட்டோ எடுப்பதை சிலர் வேலையாக கொண்டுள்ளனர். அவர்களுக்கு ஜனாதிபதி உரை அலுப்பூட்டுவதாக தான் இருக்கும்" என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி