ரயில்களில் இரவு நேரத்தில் செல்போன் சார்ஜ் போட தடை விதிக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் தகவல் அளித்துள்ளது. சில சமயம் இரவு நேரங்களில் மின் சாதன பொருட்களுக்கு சார்ஜ் போட்டுவிட்டு பயணிகள் தூங்கிவிடுவதால், திடீரென மின் கசிவு, ஷார்ட் சர்கியூட் உள்ளிட்ட காரணங்களால் வெடித்து ரயிலில் தீ விபத்து ஏற்படுகிறது. இதை தடுக்கும் வகையில், இரவு 11 முதல் அதிகாலை 5 மணி வரை செல்போன் சார்ஜ் செய்யும் பிளக் பாயிண்டுகளுக்கான மின் இணைப்பு துண்டிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.