புகை பிடிக்கும் பழக்கம் இல்லாதவர்களுக்கு நுரையீரல் புற்றுநோய் அதிகரித்து வருகிறது என உலக சுகாதார அமைப்பின் சர்வதேச புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் (IARC) தகவல் வெளியிட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டில் உலகெங்கிலும் 53-70 சதவீதம் புகைபிடிக்காதவர்களிடையே நுரையீரல் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. புகைபிடிக்காதவர்களில் நுரையீரல் புற்றுநோய் உலகளவில் புற்றுநோய் தொடர்பான இறப்புக்கு ஐந்தாவது முக்கிய காரணமாக மதிப்பிடப்பட்டுள்ளது.