கேரளாவைச் சேர்ந்த இளைஞர், தனது திருமண அழைப்பிதழை ரேஷன் கார்டு வடிவில் அச்சிட்டு அனைவரது கவனத்தை ஈர்த்துள்ளார். ஜோதிஷ் என்பவர், சிறு வயதில் அம்மாவுக்கு உதவுவதற்காக அடிக்கடி ரேஷன் கடைக்கு சென்று வந்துள்ளார். காலப்போக்கில் அவருக்கு 'ரேஷன் கடை பையன்' என்ற செல்லப் பெயர் கிடைத்துவிட்டது. இதனை நினைவுகூர்ந்த அவர், தனது திருமண அழைப்பிதழை ரேஷன் அட்டை ஸ்டைலில் அச்சிட, அது தற்போது இணையத்தை கலக்கி வருகிறது.