நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் அருகே மூலக்காடு குமாரபாளையத்தார் தோட்டத்தை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 53) விவசாயி. இவருடைய மனைவி கீதா (39). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இந்நிலையில், கணவன் - மனைவி இருவரும் விவசாய பணிக்காக தோட்டத்திற்கு சென்றுவிட்டு டிராக்டரில் வீடு திரும்பினர். கீதா டிராக்டரை ஓட்டியுள்ளார். அப்போது மழையால் மண்பாதை சேறும், சகதியுமாக இருந்ததால் கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் வயலில் தலைகுப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் சிவக்குமார், கீதா ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இதுகுறித்து நாமகிரிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.