கைகள் பராமரிப்பிற்கு பலரும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. பாத்திரங்கள் கழுவுதல், துணி துவைத்தல் உட்பட பல வேலைகளுக்கு கைகளையே பயன்படுத்துகிறோம். கைகளை பராமரிக்க வெதுவெதுப்பான நீரில் சிறிதளவு உப்பு கலந்து அதில் கைகளை மூழ்குமாறு 15 நிமிடங்கள் வைத்திருந்தால் தோலுக்கு ஊட்டமளிக்கும். அடிக்கடி நகச் சாயம் உபயோகிப்பதால் நகங்களின் நிறம் மங்கி காணப்படும். எனவே நகச் சாயம் உபயோகப்படுத்துவதை முடிந்தளவு தவிர்க்கலாம்.