குழந்தைகள் கையில் ஆரம்பத்தில் இருந்தே குறைவான நேரம் கொடுக்க வேண்டும். சாப்பிடும் நேரத்தில், அடம் பிடிக்கும் நேரத்தில் சமாதானம் செய்ய போனை கொடுக்க கூடாது. குழந்தைகளின் திறமையை கண்டறிந்து அவர்களை ஊக்குவிக்க வேண்டும். விளையாட்டுகள், நடனம், பாடல், ஓவியம் ஆகிய வகுப்புகளுக்கு அனுப்பி வைக்கலாம். வெளியில் சென்று பிற குழந்தைகளுடன் விளையாட அனுமதிக்க வேண்டும். சிறு வயது முதலே, வேறு ஆர்வத்தில் திசை திருப்பினால் சொல்போனுக்கு அடிமையாவதை தவிர்க்கலாம்.