தமிழ்நாடு சட்டப்பேரவையில் பேசிய அதிமுக எம்எல்ஏ தங்கமணி, “அடுத்த இரண்டு ஆண்டுகளில் தமிழ்நாடு அரசு 20 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்குவதற்கு ரூ.2,000 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. அதாவது ஒரு மாணவருக்கு ரூ.10,000 ஒதுக்கப்படுகிறது. 10,000 ரூபாயில் எப்படி ஒரு தரமான லேப்டாப் வாங்க முடியும்?" என கேள்வி எழுப்பினார். அதற்கு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நாளை (மார்ச் 21) விளக்கம் அளிப்பதாக பதில் கூறினார்.