திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலை பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத்திற்கான குத்தகை காலம் முடிந்து விட்டதாக கூறி தோட்டத்தை மூடிவிட்டு, அங்கிருக்கும் தொழிலாளர்களை நிர்வாகம் வெளியேறச் சொல்லிவிட்டது. இதனால், பெரும் பாதிப்பில் உள்ள அவர்களுக்கு வீட்டு மனை, வாழ்வாதாரத்திற்கு தேவையான உதவிகளை செய்துதரும்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன் பேரில் அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.