அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். பாலியல் வன்கொடுமை விவகாரத்தை விவாதிக்கக் கோரி சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் மற்றும் ஆளும் கூட்டணிக் கட்சிகள் கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்துள்ளனர். இது குறித்து விளக்கம் அளித்துள்ள முதலமைச்சர், போராட்டத்திற்கு அனுமதி வழங்குவதில் காவல்துறை பாகுபாடு காட்டுவதில்லை என தெரிவித்தார்.