தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றப் பின்னர் செயல்படுத்திய முக்கியமான திட்டம் ‘மக்களைத் தேடி மருத்துவம்’. மகளிர் சுகாதார தன்னார்வலர்கள் தொற்றா நோய்களான நீரிழிவு, ரத்தக் கொதிப்பு, கொழுப்பு போன்ற நோய்களை வீடுகளுக்கே சென்று பரிசோதித்து ஆலோசனை வழங்குவதோடு மட்டுமல்லாமல், நாட்பட்ட நோயாளிகளுக்கு மருந்துகளையும் வழங்கி வருகின்றனர். இது வயதானவர்கள், நடக்க முடியாதவர்களுக்கு பெரும் உதவியாக உள்ளது.