இந்த ஆண்டை பொறுத்தவரை கடந்த ஆண்டை விட கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 124 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு பிப்ரவரியில் வெப்பநிலை அதிகமாக இருந்தது தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து, மார்ச் முதல் மே மாதம் வரை வடகிழக்கு மாநிலங்கள், வட மாநிலங்கள், தென் மேற்கு இந்திய பகுதிகளில் கடந்த ஆண்டுகளை விட வெப்ப அலை அதிகமாக வீசும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.