சில பெண்களுக்கு மாரடைப்பு ஏற்படும் போது வலிக்கு பதில் சிறு அசவுகரியத்தை உணரலாம். அதனை சாதாரணமாக கருதக்கூடாது. முதுகின் மேல் பகுதி, கைகள், கழுத்து, தாடை போன்ற பகுதிகளில் வலி ஏற்படும். மாரடைப்பு ஏற்படுவதற்கு சில இரவுகளுக்கு முன் தூக்கத்தில் பிரச்சனைகள் வரலாம். வயிற்றுப் பகுதியில் வலி, அழுத்தத்தை உணரக்கூடும். மாரடைப்பு ஏற்படுவதற்கு முன்பு இந்த அறிகுறி பெண்களுக்கு மட்டுமே வெளிப்படும்.