குஜராத்தைச் சேர்ந்த ‘கிர்நார்-4’ ரக வேர்க்கடலை குறைந்த காலத்தில் நல்ல மகசூலை கொடுக்கிறது. விவசாயி குகன் கூறிய பொழுது, “இந்த வேர்க்கடலையை 120 நாட்களில் அறுவடை செய்யலாம். நோய் தாக்குதல், பூச்சி தாக்குதல் அறவே இல்லை. நீர் நிர்வாகம் மற்றும் பராமரிப்பை முறையாக கையாண்டால் ஒரு ஏக்கருக்கு 30 முட்டை வரை மகசூல் பெறலாம். இது பிற ரகத்தை காட்டிலும் 10 மூட்டைகள் கூடுதலாக மகசூல் தரும். இந்த ரகம் எண்ணெய் உற்பத்திக்கு ஏற்றது” என்று கூறினார்.