செம்பருத்தி பூ தேநீர் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இந்த தேநீர் உடலில் இரத்த அழுத்த அளவைக் குறைக்க உதவுகிறது என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது இருதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது. இந்த டீயில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் பாதிப்பில் இருந்து உடலை பாதுகாக்க உதவுகிறது. செம்பருத்தி டீயை தொடர்ந்து குடிப்பதால் உடலில் உள்ள ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் மற்றும் வீக்கத்தைக் குறைக்கலாம்.