தூத்துக்குடி மாவட்டம் கவர்னகிரி என்னும் ஊரில் கட்டக் கருப்பணனுக்கும், முத்திருளி அம்மாளுக்கும் மகனாக பிறந்த இந்திய விடுதலைப் போராட்ட வீரர்தான் சுந்தரலிங்கனார். நேர்மை, வீரம், புத்திகூர்மை ஆகியவற்றை ஒருங்கே பெற்றவர். இவரது வீரத்தைக் கேள்விப்பட்ட கட்டபொம்மன் தனது ஒற்றர் படைக்குத் தளபதியாக்கினார். தனது வீரத்தாலும், அறிவாற்றலாலும் அனைத்துப் படைகளுக்கும் தளபதியாக உயர்ந்தார். ஆங்கிலேயருக்கு எதிரான போரில் கட்டபொம்மனுக்கு இவர் பக்கபலமாக இருந்தார்.