இமாச்சலில் கடும் பனி பொழிந்து வருகிறது. இதனால் சிம்லா நகரமே பனி போர்த்தியபடி காட்சியளிக்கிறது. கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறையையொட்டி ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இமாச்சல் பிரதேசத்திற்கு வருகை தந்தனர். ஆனால் கடும் பனிப்பொழிவால் வாகனங்களை இயக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் நடுரோட்டிலேயே நிறுத்தப்பட்டுள்ளன. வாகனங்களின் மீது பனி படர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.