உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் 8 வயது சிறுமி நேற்று (டிச.24) அடையாளம் தெரியாத நபர்களால் கடத்தப்பட்டார். இந்நிலையில், இன்று (டிச.25) காலை ரத்தக்கறையுடன் சாலையில் சாக்கு மூட்டை கிடந்துள்ளது. அதனை பிரித்தபோது, அதில் அரை நிர்வாணமா சிறுமியின் சடலம் கிடந்துள்ளது. சிறுமியின் வீட்டில் இருந்து 200 மீட்டர் தொலைவில் இந்த சாக்கு மூட்டை வீசப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் சடலத்தை மீட்டனர். தொடர்ந்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.