இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்திற்கு கொடுத்த ஏலத்தை ரத்து செய்ய வேண்டும் என அமைச்சர் துரைமுருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “நில விவகாரங்களில் மத்திய அரசுக்கு எந்தப் பங்கும் இல்லாதபோது, சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை மாநில அரசு மட்டுமே நிர்வகிக்க வேண்டியிருக்கிறது. மாநில அரசின் ஆட்சேபனையை மீறி மத்திய அரசு ஏன் ஏலத்தை மேற்கொண்டது?. மக்களின் வாழ்வாதாரத்தின் நலனுக்காக, கனிமத் தொகுதியை இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கியதை அமைச்சகம் ரத்து செய்ய வேண்டும்” என்றார்.