உலக அளவில் அதிக மக்கள் பின்பற்றும் மதமாக கிறிஸ்துவ மதம் உள்ளது. உலக மக்கள் தொகையில் 30% பேர் கிறிஸ்துவ மதத்தை பின்பற்றுகின்றனர். இயேசு கிறிஸ்துவின் பிறந்த நாளான டிசம்பர் 25-ம் தேதி கிறிஸ்துமஸ்ஸாக மக்கள் கொண்டாடி வருகின்றனர். ஆனால் தஜிகிஸ்தான், புருனே, சோமாலியா, வடகொரியா, சவுதி அரேபியா போன்ற நாடுகளில் கிறிஸ்துமஸ் கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது. மதம் மற்றும் பிற காரணங்களால் கிறிஸ்துமஸுக்கு இந்த நாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது.