கனமழை - 5000 நெல் மூட்டைகள் சேதம்

78பார்த்தது
கனமழை - 5000 நெல் மூட்டைகள் சேதம்
ஸ்ரீபெரும்புதூர் ராமானுஜபுரத்தில் மதுரமங்கலம், சிவன்கூடல் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளிடம் இருந்து 5000 நெல் மூட்டைகள் நேரடி கொள்முதல் செய்யப்பட்டன. ஆனால், இவை அனைத்தும் மழையில் நனைந்து சேதம் அடைந்துள்ளன. அதிகாரிகள் அலட்சியம் காரணமாகவே நெல் மூட்டைகள் சேதம் அடைந்ததாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை முறையாக தார்ப்பாய் கொண்டு மூடப்பட்டு இருந்தால் இந்த நிலை ஏற்பட்டு இருக்காது என விவசாயிகள் கூறுகின்றனர்.

தொடர்புடைய செய்தி