உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாகும் மகாதேவன்

78பார்த்தது
உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாகும் மகாதேவன்
சென்னை உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி மகாதேவன் பொறுப்பு ஏற்க இருப்பதாக இன்று (மே 16) அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மே 29ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக கங்காபூர்வாலா பொறுப்பு ஏற்றுக் கொண்டார். இந்த நிலையில், அவர் வருகிற 23 ஆம் தேதியுடன் ஓய்வு பெற இருக்கிறார். அதன் காரணமாக அவரைத் தொடர்ந்து, உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக மகாதேவன் மாற்றம் செய்யப்பட இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி