டிக்கெட் கேட்ட நடத்துநர் மீது தாக்குதல் - இளைஞர்கள் கைது

76பார்த்தது
டிக்கெட் கேட்ட நடத்துநர் மீது தாக்குதல் - இளைஞர்கள் கைது
திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று (மே 15) பேரம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து அரசுப் பேருந்து சென்று கொண்டுடிருந்தது. அதில் மூன்று இளைஞர்கள் ஏறியுள்ளனர். அவர்கள் கஞ்சா போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அவர்களிடம் நடத்துநர் ஐயப்பன் (42) டிக்கெட் கேட்டுள்ளார். அதற்கு போதையில் இருந்த மூன்று இளைஞர்கள், “எங்களிடமே டிக்கெட் கேட்கிறாயா?” என கூறி சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் போதை இளைஞர்கள் மூவரையும் கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி