தொடர் மழையால் பருத்தி சாகுபடி பாதிப்பு - விவசாயிகள் வேதனை

62பார்த்தது
தொடர் மழையால் பருத்தி சாகுபடி பாதிப்பு - விவசாயிகள் வேதனை
திருவாரூர் மாவட்டத்தில் 40 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து பெய்து வந்த கனமழை காரணமாக வயல்களில் மழை நீர் தேங்கியுள்ளது. இதனால், 75 நாட்கள் ஆன பருத்தி பயிர்கள் சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக பருத்தி பூக்கள் அனைத்தும் உதிர்ந்து விழுந்துள்ளதால் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி