தமிழகத்தில் இன்று வெப்ப அலை - மறந்தும் இத செய்யாதீங்க

29971பார்த்தது
தமிழகத்தில் இன்று வெப்ப அலை - மறந்தும் இத செய்யாதீங்க
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று(ஏப்ரல் 7) வெப்ப அலை வீசக்கூடும் என்று இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் ஏப்ரல் 9, 10 ஆம் தேதிகளில் வடதமிழக உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெப்ப அலை சமயத்தில், குறிப்பாக மதியம் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை பொதுமக்கள் வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும். மது, தேநீர், காபி மற்றும் கார்பனேற்றப்பட்ட குளிர்பானங்கள் அல்லது சர்க்கரை பானங்களை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி