நமது உடல் நலனை காப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார். மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இதய நோயால் ஆண்டுதோறும், 1.7 கோடி பேர் இறப்பதாக, உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. பொதுவாக, உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், முறையற்ற உணவு, உடற்பயிற்சியின்மை, மன அழுத்தம், புகைபிடித்தல் போன்றவை இதய நோய் பாதிப்புகளுக்கு காரணமாகின்றன” என குறிப்பிட்டுள்ளார்.