விளையாட்டினால் மாரடைப்பு.. சிறுவன் உயிரிழப்பு

79பார்த்தது
விளையாட்டினால் மாரடைப்பு.. சிறுவன் உயிரிழப்பு
பிரிட்டனில் டிக்டாக்கில் ட்ரெண்டிங்கான Chroming Challenge-ஐ செய்யும்போது மாரடைப்பு ஏற்பட்டு 11 வயது சிறுவன் டாமி லீ கிரேஸி உயிரிழந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த சேலஞ்சை செய்த பிறகு யாரிடமும் பேசாமல் இருந்த அவர் மயக்கமடைந்துள்ளார். இதனையடுத்து மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் சிறுவன் ஏற்கனவே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். வீட்டில் உள்ள தின்னர், வார்ணிஷ், நெயில் பாலிஷ், பெயிண்ட் உள்ளிட்ட பொருட்களை நுகர்ந்து பார்ப்பது தான் Chroming Challenge என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி