முன்னாள் காதலியை பார்க்க சென்ற பிரபல நடிகர்

563பார்த்தது
முன்னாள் காதலியை பார்க்க சென்ற பிரபல நடிகர்
சிவாஜி ப்ரோடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் அறுவடை நாள் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஜி.எம்.குமார். இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளியான அவன் இவன் படத்தில் அயனஸ் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமான இவர், தற்போது X தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தனது முன்னாள் காதலியை சந்திக்க 3500 கிலோமீட்டர் தொலைவு கார் ஓட்டி அவர் வந்ததாக கூறியுள்ளார். மெட்ராஸில் இருந்து பெங்களூரு, கோவா வழியாக மும்பை வரை சென்ற அவர், மீண்டும் சென்னை திரும்பியுள்ளார். கடந்த 30 ஆண்டுகளுக்கு மேல் அவர் இதனை செய்து வருகிறாராம். அவரின் இந்த பதிவில் பலர் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி