நடு வானில் கழன்று விழுந்த விமான சக்கரம் (வீடியோ)

83பார்த்தது
அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் இருந்து ஜப்பானுக்கு ஜெட்லைனர் என்ற விமானம் சென்று கொண்டிருந்தது. இந்த விமானம் ரன்வேயில் சீறிப்பாய்ந்து வானை நோக்கி பறக்க தொடங்கியது. அப்போது எதிர்பாராத விதமாக விமானத்தின் சக்கரம் கழன்று கீழே விழுந்து ஓடியது. விமான நிலையத்தில் இருந்த கார் பார்க்கிங்கில் விழுந்ததால் பல கார்கள் சேதமடைந்துள்ளன. இதனையடுத்து 249 பயணிகளுடன் பறந்துகொண்டிருந்த விமானம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு திருப்பி விடப்பட்டது. விமானத்தின் ஒரு சக்கரம் மட்டுமே கழன்று விழுதிருந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி