விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே 11ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு பாலியல் தொல்லை அளித்த தொடக்கப் பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். தொடக்கப் பள்ளியில் அரையாண்டு விடுமுறையின் போது விளையாட வந்த தங்களுக்கு, தலைமை ஆசிரியர் ராஜேஷ் பாலியல் தொல்லை அளித்ததாக மாணவர்கள் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரை விசாரித்த குழந்தைகள் நல பாலியல் தடுப்பு பிரிவு குற்றச்சாட்டு உறுதியானதால் போலீசார் விசாரித்து நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்ததை அடுத்து போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.