கணவனுக்கு தெரியாமல் இரண்டாவது திருமணம் செய்த மனைவி

22059பார்த்தது
கணவனுக்கு தெரியாமல் இரண்டாவது திருமணம் செய்த மனைவி
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பகுதியை சேர்ந்த பாலு (47). இவருக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளனர். இதில் மகன் 3 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துள்ளார். இந்நிலையில் பாலுவின் மனைவிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் மதுரையை சேர்ந்த இளைஞர் அறிமுகமாகியுள்ளார். நட்பாக இருந்த இவர்களது பழக்கம் கள்ளக்காதலாக மாறி ஒரு கட்டத்தில் திருமணம் செய்துள்ளனர். பாலுவின் மனைவி அவ்வப்போது உறவினர் வீட்டிற்கு செல்வதாகக்கூறி அந்த இளைஞருடன் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர்கள் திருமணம் செய்த புகைப்படம் இன்ஸ்டாகிராமில் கசியவே, நேற்று முன்தினம்(மே 12) பாலு தன் மனைவியை கடுமையாக தாக்கியதில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி