தண்டவாளத்தில் தூங்கிய இளைஞர் ரயில் ஏறி பலி

54பார்த்தது
தண்டவாளத்தில் தூங்கிய இளைஞர் ரயில் ஏறி பலி
வேதாரண்யத்திலிருந்து குமாரசாரதி (18), பிரபாகரன்(18), தூளசிநாரயணன்(18) ஆகியோர் மணக்காடு மகா மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவுக்காக சொந்த ஊருக்கு வந்து இருந்துள்ளனர். இந்நிலையில் 12ஆம் தேதி இரவு மது போதையில் இருந்த இந்த மூவரும், திருத்துறைப்பூண்டியில் இருந்து திருவாரூர் செல்லும் டெமு ரயில் பாதையில் படுத்து தூங்கியுள்ளனர். அப்போது அந்த வழியாக அதிகாலை 4:30 மணியளவில் வந்த டெமு ரயில் அவர்கள் மீது எறியதில் குமாரசாரதி உடல் துண்டாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் பிரபாகரன், தூளசிநாரயணன் ஆகியோர் கை, கால்கள் துண்டாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி