அதிமுகவில் சில நாட்களாக அமைதியாக தர்ம யுத்தத்தை நடத்தி வருகிறார் செங்கோட்டையன். ஈரோடு மாவட்டத்தில் தன்னை கேட்காமல் சிலருக்கு பதவி வழங்கியது தான் கோபத்திற்கு காரணம் என கூறப்படுகிறது. இந்த நிலையில் முன்னாள் அமைச்சர்கள் சிலரை அனுப்பி செங்கோட்டையனிடம் இபிஎஸ் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். தற்போது இதற்கு பலன் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.