ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் ராஜினாமா செய்துள்ளார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் வழங்கினார். அவருக்கு பதிலாக நயாப் சிங் சைனி முதல்வராக பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹரியானாவில் பாஜகவுக்கு ஆதரவு அளித்து வந்த கூட்டணி கட்சியான ஜே.ஜே.பி வாபஸ் பெற்றதால் அம்மாநில முதல்வர் மனோகர்லால் கட்டார் ராஜினாமா செய்துள்ளார். முதல்வர் மட்டுமன்றி பாஜகவை சேர்ந்த அனைத்து அமைச்சர்களும் கூண்டோடு பதவி விலகியுள்ளனர்.