ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் பேட்டிங் குறித்து இந்திய முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் சுவாரசிய தகவலொன்றை பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர், "ஸ்மித் பேட்டிங்கை எத்தனை முறை வீட்டில் பார்த்து இருப்பேன் என எனக்கே தெரியாது. டிவியின் அருகில் சென்று அவரின் கையை ZOOM செய்து பார்த்துள்ளேன். என்னுடைய மனைவி மற்றும் குழந்தைகள் வீட்டில் இருந்தாலும், சில நேரங்களில் அவர்களை கவனிக்காமல் கூட இருந்துள்ளேன். இதை எல்லாம் கவனித்த எனது மனைவி ஸ்டீவ் ஸ்மித்தை காதல் செய்கிறீர்களா என கிண்டலாக கேட்டார்” என்று கூறியுள்ளார்.