உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்ற 'ஸ்குயிட் கேம்' தொடரின் 3-வது சீசனின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொடரின் 2-வது பாகம் கடந்த மாதம் 26-ம் தேதி வெளியானது. இந்நிலையில், இந்த தொடரின் 3-வது சீசன் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்த தொடரின் வரும் ஜூன் மாதம் 27ம் தேதி வெளியாகும் என நெட்ப்ளிக்ஸ் அறிவித்துள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி வைரலானது குறிப்பிடத்தக்கது.