மகாராஷ்டிரா, தெளந்து நகரில் 7ம் வகுப்பு படிக்கும் மாணவன் தனது சக மாணவியை பலாத்காரம் செய்து கொலை செய்யுமாறு கூறி 9ம் வகுப்பு மாணவனுக்கு 100 ரூபாய் கொடுத்த சம்பவம் நடந்துள்ளது. 7ம் வகுப்பு மாணவன் ரிப்போர்ட் கார்டில் பெற்றோரின் கையெழுத்தை மோசடி செய்ததாக சக மாணவி ஆசிரியையிடம் கூறியதால், அம்மாணவன் ஆத்திரத்தில் இவ்வாறு திட்டமிட்டுள்ளான். பணத்தை பெற்றுக்கொண்ட மாணவன், பள்ளி நிர்வாகத்திடம் கூறியதையடுத்து இந்த உண்மை தெரியவந்துள்ளது.